என் கொடுமை சரவணன் இது….நம் நாட்டில் உள்ள வங்கி துறையின் அவல நிலை..

சுமார் 8 மாததுக்கு முன் எனக்கு ஏற்பட்ட அனுபவம் இது. நம் இந்திய நாட்டில் நாட்டுடமை ஆக்கப்பட்ட வங்கிகள் பல உண்டு, ஆனால் அவற்றில் செயல் பாடுகள் எப்படி இருக்கு ? தெரியவில்லை. மற்ற வங்கிகளின் செயல்பாடுகள் எப்படி இருக்கு என்று தெரியாமல் குறை கூற விரும்பவில்லை.

ஆனால் சென்னையில் கோடம்பாக்கத்தில் உள்ள ஒரு நாட்டுடமை ஆக்கப்பட்ட வங்கியில் 8 மாதத்துக்கு முன் எனக்கு எற்பட்ட அனுபவம்.

நான் அந்த வங்கியில் உள்ள ஒரு சேவையை பெறுவதற்காக வந்து இருந்தேன். அது என்னவெனில் ( online fund transfer ) இணையதளத்துடன் இணைந்த பண இடப் பெயர்வு சேவையை என் வங்கி கணக்கில் இயக்க வந்து இருந்தேன்.

அந்த வங்கியில் இந்த சேவை இருப்பதை, அந்த வங்கியின் இணையதளத்தில் சென்று படித்த பின் நன்றாக அறிந்து நான் அதை பெற சென்றேன் . பண இடப் பெயர்வு சேவையை பெறுவதற்கு முதலில் இணையதள சேவையை பெறவேண்டும்.

அதனால் முதலில் அதை பெறுவதற்காக உள்ள படிவத்தை விண்ணபித்தேன். இதை அங்குள்ள சீனியர் மேனேஜர் இடம் கொடுத்தேன், அவர் அதை பெற்று கொண்டு ஒரு வாரம் கழித்து வாருங்கள் உங்களுக்கு இணையதள சேவை செயல் படுத்தி தரப்படும். மற்றும் அதற்கான் பயனீட்டாளர் பெயர்,கடவுச்சொல் இரண்டையும் அன்று வந்து பெற்றுகொளுங்கள் என்றார்.

அதை போல் ஒரு வாரத்துக்கு பின் சென்று அவரை பார்தேன். அவர் என்னுடைய பயனீட்டாளர் பெயர்,கடவுச்சொல் இரண்டையும் எடுத்து கொடுத்தார். நான் அதை பெற்று கொண்டு, இப்போழுது நான் இதை உபயோகித்து ( online fund transfer ) இணையதளத்துடன் இணைந்த பண இடப் பெயர்வு செய்யலாமா என்று கேட்டேன்.

அதற்கு அவர் அளித்த பதில் அப்படி ஒரு சேவை இல்லை என்றார். நான் மீண்டும் அவரிடம்,மற்ற வங்கியில் இந்த சேவை இருக்கிறதே என்றேன். அதற்கு அவர் இந்த மாதிரி பணத்தை இணையத்தில் பரிமாற்றம் செய்ய முடியாது என்றார். நான் மீண்டும் அவரிடம், நான் என் மற்றோரு தனியார் வங்கியில் இணையத்தில் பணத்தை பரிமாற்றம் செயதிருகிறேன் என்றேன். அவர் அதை ஒத்து கொள்ளவில்லை அப்படி பண்ண முடியாது என்றார்.

இவரிடம் இதற்கு மேல் பேசினால் நாமும் முட்டாள் ஆகி விடுவோம் என்று அங்கு இருந்து வீடு திரும்பினேன்.

நான் அடுத்த நாள் அந்த வங்கியின் இணையதளத்துக்கு சென்று என் பயனீட்டாளர் பெயர்,கடவுச்சொல் உபயோகித்து உள்ளே சென்றேன். உள்ளே பண இடப் பெயர்வு செய்ய வழி இருக்கா என்று பார்த்தேன் இருந்தது. அதை உபயோகித்து என் மற்றொரு வங்கிகணக்கு பணத்தை அனுப்பி பார்தேன்,ஒழுங்காக மாறியது.

என்ன ஒரு அவல நிலை, வங்கியில் பணிபுரியும் நபருக்கே அந்த வங்கியில் இருக்கும் சேவை பற்றி தெரியாத அவல நிலை. அவர் எப்படி வங்கிக்கு வரும் வடிக்கையாளருக்கு உதவ முடியும். எனக்கு ஏற்பட்ட இந்த அனுபவம் நினைத்து சிரிப்பதா இல்லை அவருடைய அறியாமை நினைத்து வருந்துவதா.

மக்களுக்கு சேவை செய்யும் இந்த வங்கி துறையில் இப்படி ஒரு நிலையா, இது எப்போழுது நீங்கும். நம் நாட்டில் உள்ளே மற்ற நாட்டுடமை ஆக்கப்பட்ட வங்கிகளில் இந்த நிலைமை இல்லாமல் இருக்க வேண்டும் என்று வேண்டி கொள்கிறேன்.

நன்றி: இதில் உள்ள படங்கள் கூகுள் தேடல் இணையத்தளம் மூலம் எடுக்கப்பட்டது. படங்கள் எடுக்கப்பட்ட இணையதளங்களுக்கு நன்றி

_________________________________________

திருக்குறள்:

இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு.
___________________________________________

Advertisements
This entry was posted in தகவல் and tagged , , , , , . Bookmark the permalink.

5 Responses to என் கொடுமை சரவணன் இது….நம் நாட்டில் உள்ள வங்கி துறையின் அவல நிலை..

 1. adhithakarikalan சொல்கிறார்:

  அந்த வங்கியின் பெயரையும் நீங்கள் சொல்லி இருக்கலாம், இதில் எல்லாம் நாகரீகம் பார்க்க கூடாது…

 2. படைப்பாளி சொல்கிறார்:

  இந்த மேட்டர்ல நானும் பாதிக்கப்பட்டிருக்கேன் நண்பா..ரொம்ப கொடும

 3. ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

  பொதுவான சட்டங்கள் என்ன இருக்கிறது என காவல்துறையினர் பலருக்கும் தெரியாதது போல, தன்னுடைய வங்கி சேவையையும் தெரியாமல் இருக்கிறார், அதிகாரி.

  அது சரி நாட்டில் எது சரியாக இருக்கிறது. இதை எதிர்ப்பார்க்க.

 4. Gnanasekaran சொல்கிறார்:

  இதே அனுபவம் ஓராண்டுக்கு முன்பு எனக்கும் ஏற்பட்டது. அதுவும் பாரதத்தின் மிகப்பெரிய நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கியில். ஆனால் நம் தமிழ்நாட்டில் அல்ல. ஒரிஸாவில். சம்பந்த்தப்பட அதிகாரிக்கு இணையதள சேவைகள் பற்றி ஒன்றுமே தெரியவில்லை. வங்கி மேளாலரை அணுகினால் ‘ அந்த அதிகாரிதான் அதற்கான பிரத்தியேக பயிற்சிக்காக போய்வந்தவர்’ அவரையே கேளுங்கள் என்கிறார். பின்னர் நான் சென்னை வந்துதான் இணையதள கணக்கை தொடங்கினேன்

 5. premcs23 சொல்கிறார்:

  இந்திய வங்கி துறையின் அவல நிலை நண்பரே

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s