பேஸ் புக்கை உபயோகித்து போக்குவரத்தை ஒழுங்கு படுத்த முடியுமா ? முடியும்..

நியூ டெல்லி இந்தியாவின் தலைநகரம் மட்டும் அல்ல, நாட்டின் பெரிய மாநகரங்களிளும் ஒன்று.மொத்த மக்கள்தொகை சுமார் 12 மில்லியன் தாண்டும். ஆனால் இங்கு 5000 போக்குவரத்துக்கு காவல்தறையினர் மட்டும் தான் இருக்கின்றனர். இன்னும் கூடுதலாக இங்கு கவனகுறைவாக வாகனம் ஓட்டும் ஓட்டுநர்கள் மற்றும் விதிமுறைகளை மீறி ஓடும் ஓட்டுநர்கள் பலர் உள்ளனர்.

ஆனால் இரண்டு மாதத்திற்கு முன்பு சில விசயங்கள் மாறின. டெல்லி போக்குவரத்துக்கு காவல்துறை பேஸ் புக்கில் தனகென்று ஒரு பக்கத்தை துவக்கியது.


http://www.facebook.com/pages/New-Delhi-India/Delhi-Traffic-Police/117817371573308v=wall&__a=28&

பொதுமக்கள் இதில் விதிமுறைகளை மீறும் வாகனங்களின் புகைபடத்தையும் மற்றும் நிகழ்படம் ஆகியவற்றை மக்கள் தாங்கலாகவே முன்வந்து இதில் இணைத்தனர். இதில் சுவாரசியமான விசயம் காவல்துறை பொதுமக்களிடம் புகைபடத்தையும் மற்றும் நிகழ்படம் எதையும் இணைக்க சொல்லவில்லை

இதை முன்மாதிரியாக எடுத்து பல நல்ல குடிமக்கள் தாமகவே முன்வந்து இதில் தங்களை இணைத்து கொண்டு உள்ளனர். தற்போது சுமார் 17,000 ரசிகர்கள் இந்த பக்கத்துக்கு உள்ளனர். மற்றும் 3,000 புகைப்படங்களும் , சில நிகழ்படங்களும் உள்ளது. இதில் சுமார் 665 பேர்மேல் நடவடிக்கை எடுக்க பட்டு உள்ளது. துரதிஷ்டவசமாக இந்த 665 பேரில் 50 பேர் காவல்துறையினர்.

டெல்லி போக்குவரத்துக்கு காவல்துறை இணை ஆணையாளர் சத்யேந்திர கார்க், தெரிவித்தது என்ன வெனில்.டெல்லி போக்குவரத்து காவல்துறையை சேர்ந்த 4 அதிகாரிகள் பேஸ் புக்கில், இந்த பக்கத்தை கண்காணித்துவருகின்றனர். இதில் மக்கள் அனுப்பும் தகவல்களை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கின்றனர். அது மட்டும் இல்லாமல் டெல்லியில் உல்ல பல பகுதியின் போக்குவரத்தில் தினசரி மாற்றங்கள், போக்குவரத்துக்கு தகவல்கள் அனைத்தையும் தருகின்றனர்.

அவர் மேலும் தெரிவித்தது, மக்கள் வாகனம் ஓட்டும் போது புகைப்படங்களை எடுக்க கூடாது என்றும். அது போக்குவரத்து விதிகளை மீறும் செயல் ஆகும்.இது (social networking website)சமூக வலையமப்பு மூலம் செய்யப்படும் சிறந்த சேவை..இது இன்றைய காலக்கட்டத்தில் நாட்டுக்கு தேவை..

இந்த செயல்முறை ஒட்டுமொத்த இந்திய போக்குவரத்து காவல்துறையும் பின்பற்றினால் நன்றாக இருக்கும்.

நன்றி : http://www.facebook.com

_________________________________________

திருக்குறள்:

குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது.
___________________________________________

Advertisements
This entry was posted in தகவல் and tagged , , , , , . Bookmark the permalink.

3 Responses to பேஸ் புக்கை உபயோகித்து போக்குவரத்தை ஒழுங்கு படுத்த முடியுமா ? முடியும்..

  1. s.chandrasekar சொல்கிறார்:

    nalla thakaval …..makkaluku…nanmaiyana cheithe

  2. adhithakarikalan சொல்கிறார்:

    நல்ல முயற்சி… நல்ல விஷயம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s