தொடுதிரை தற்போதைய காலத்தில் விஞ்ஞான உலகிலும் மற்றும் அன்றாட வாழ்கையில் பிரபலமாகி வருகிறது இது அடுத்த தலைமுறையின் தொழில்நுட்பம் எனலாம். ஆனால் தற்போது Skinput எனப்படும் புதிய தொழில்நுட்பம், நம் உடம்பு தசையை உபயோகித்து கணினியுடன் தொடர்புகொள்ள உருவாக்க பட்டு உள்ளது.
இனிமேல் இதை அடுத்த தலைமுறை தொழில்நுட்பம் எனலாம் மைக்ரோசாப்ட் மற்றும் கார்னெகி மெல்லோன் பல்கலைகழகமும் இணைந்து சமீபத்தில் Skinput தொழில்நுட்பத்தை ஒரு கண்காட்சியில் அறிமுகபடுத்தியது.
இந்த தொழில்நுட்பம் நம் தசையுடன் கணினியை இணைக்க உதவும்.
இது இயந்திர அதிர்வுகளை உணரும் வண்ணம் நம் விரல்கள் தசைகளை
தட்டும்போது வரும் பல அதிர்வுகளை பதிவு செய்து உள்ளது.இதனால்
நாம் நம் கணினி விசைப்பலகை( keyboard ) மற்றும் இயக்கப் பிடி( joystick )
ஆகியவற்றின் செயல்களை நம் சதை, தசை, விரல்கள் ஆகியவற்றின்
உதவியுடன் செய்யமுடியும்.
நம் விரல்களை தசையின் மேல் தட்டும்போது அது தகவல்களை கணினிக்கு உள்ள கொண்டு சேர்க்கிறது. தகவல் பரிமாற்றத்துக்கு உதவ தற்போது ஒரு கருவியை நம் கையில் கட்டவேண்டும். ஆனால் இந்த தொழில்நுட்பம்வளரும் போது கண்டிப்பாக இது ஒரு கைக்கடிகாரம் அளவுக்குமாறும்.
இதன் செயல்பாடுகளை கீழவரும் நிகழ்படத்தில் காண்க..
நன்றி: படங்கள் எடுக்க பட்ட இணையதளங்களுக்கு நன்றி.
__________________________________________
திருக்குறள்:
இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை.
__________________________________________
நல்ல தகவல், உங்களது 50வது இடுகைக்கு எனது வாழ்த்துகள், உங்ககிட்ட இருந்து நிறைய… நிறைய… எதிர் பார்க்கிறோம்…
உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி.
information is very good
Thank u
டெக்னாலஜி எங்கேயோ போய்டிருக்கு…எப்போ வரும்னு எதிர்பார்க்கிறோம்..நல்ல செய்தி.
ஆம் நண்பரே
Skinput என்ற புதிய தொழில்நுட்பம் பற்றி தகவல் கொடுத்ததற்கு நன்றி. வாழ்த்துக்கள்
சௌம்யா
உங்கள் வருகைக்கு நன்றி தோழி