உங்கள் Facebook கில் தமிழ் தட்டச்சு மென்பொருளை இணைத்து கொள்ளலாம்.

Tamil99 Key Sequences
இந்த தலத்தில் இதற்கு முன் உங்களுக்கு தமிழில் தட்டச்சு  செய்ய ஒரு வழியை கூறியிருந்தேன்.
.

தமிழில் தட்டச்சு  செய்ய இணையத்தில் பல மென்பொருட்கள் உள்ளன.
தற்போது மற்றும் ஒரு வழிமுறையை உங்களுக்காக அறிமுக
படுத்துகிறேன். w3TamilWK என்ற இந்த மென்பொருள் தமிழில் தட்டச்சு
செய்ய உங்களுக்கு உதவும்.
.
.
  • இதை இணையத்தில் இருந்து இலவசமாக தரவிறக்கம் செய்து உபயோகிக்கலாம்.
  • Blogger தங்கள் இணையத்தளத்தில் இதை இணைத்து கொள்ளலாம்.
  • மற்றும் சிறப்பு அம்சமாக இதை Facebook கில் இணைத்து கொள்ளலாம் .
.
கீழ் வரும் இணையதளத்துக்கு சென்று உங்கள் facebook கில் இந்த
மென்பொருளை இணைத்து கொள்ளலாம்.
.
w3Tamil Keyboard @ Facebook
http://www.facebook.com/w3tamilkeyboard
.
இதை உபயோகிப்பது மிகவும் எளிமை. நீங்களும் உங்கள் facebook மற்றும் blogger இணையதளங்களில் உபயோகித்து பாருங்கள்.
.
நன்றி:  http://www.w3tamil.com/

___________________________________________________

திருக்குறள்:

விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று.

___________________________________________________

Advertisements
Posted in தொழில்நுட்பம் | Tagged , , , , , , , , , , | 11 பின்னூட்டங்கள்

உலகை தன்பக்கம் ஈர்க்க வரும் புதிய கண்ணுக்குத் தெரியாத iphone 5G

iphone 5 மீண்டும் உலகத்தில் உள்ள அனைவரையும், தன பக்கம் ஈர்த்து மாற்றப்போகிறது. iphone னை நாம் அடுத்த தலைமுறை கைபேசி என்று கூறிவருகிறோம். அதை மாற்ற அதன் புதிய வடிவமைப்பு iphon 5 வெளிவர இருக்கிறது. iphone 5G, 8MP கேமராவை கொண்டுள்ளது, Sony நிறுவனம் இதில் உள்ள லென்ஸ் மாதிரி மற்றும் 4G network உதவியை வழங்கியுள்ளது. இந்த அழகிய தொழில்நுட்பத்தின் வடிவமைப்பு அருமை.

நன்றி: படங்கள் எடுக்கப்பட்ட தளங்களுக்கும் மற்றும் Youtube.com

___________________________________________________

திருக்குறள்:

இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு.

___________________________________________________

Posted in தொழில்நுட்பம் | Tagged , , , , , , , , , , , | 10 பின்னூட்டங்கள்

உலகின் மிக பெரிய பிரமிப்பூட்டும் அதிசிய நிகழ்பட மாயை

உண்மையில் இது ஒரு கணினியில் பார்க்கப்படும் மாபெரும் மாயை.
இந்த படத்தை பார்க்கும் வழிமுறைகள்

__

1. அமைதியாகவும் உங்களை ஒருநிலை படுத்தி, படத்தின் மத்தியில் __உள்ள 4 சிறிய புள்ளியை
__30 முதல் 40 வினாடிகள் பார்க்கவும்
2. உங்கள் அருகில் உள்ள சுவற்றில் பார்க்கவும் ( நீங்கள் பார்க்கும் சுவர் _..ஒரு நிறமாகவும் சமமாகவும் இருக்க வேண்டும் )
3. ஒரு வட்ட ஒளிவட்டம் தெரியும்.
4. உங்கள் கண்ணை முடி முடி திறந்து பார்க்கவும்.
5. நீங்கள் என்ன பார்த்தீர்கள் ? யாரை பார்த்தீர்கள் ? .

நன்றி: படங்கள் எடுக்கப்பட்ட தளங்களுக்கு நன்றி

___________________________________________________

திருக்குறள்:

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு.

___________________________________________________

Posted in தொழில்நுட்பம் | Tagged , , , , , , , , , , | 12 பின்னூட்டங்கள்

எந்திரன் படத்தின் கிராபிக்ஸ் தொழில்நுட்பம் எப்படி இருக்கு உங்கள் கருத்தை இங்கு பகிருங்கள்.

கடந்த வெள்ளிகிழமை வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும்
எந்திரன் திரைப்படம் பலரும் பார்த்து ரசித்து இருப்பீர்கள். அந்த படத்தில் வரும் தொழில்நுட்ப காட்சி அமைப்பு பற்றி உங்கள் கருத்தை இங்கு பகிருங்கள்.

நன்றி: படங்கள் எடுக்கப்பட்ட தளங்களுக்கு நன்றி

___________________________________________________

திருக்குறள்:

புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை
அகத்துறுப்பு அன்பி லவர்க்கு.

___________________________________________________


Posted in தொழில்நுட்பம் | Tagged , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

உங்கள் கணினியை தானாக shutdown செய்ய ஒரு சிறிய மென்பொருள்.

______________

ஒரு சிறிய மென்பொருளை உபயோகித்து உங்கள் கணினியை தானாக Shutdown, Restart, மற்றும் Stand by செய்யலாம். சிலநேரங்களில் நம் வீட்டில் இல்லை அலுவலகத்தில் கணினியில் சில செயல்கள் வெகுநேரம் ஓடும். அந்த வேலை நடக்கும் போது நம் கணினித்திரையை பார்த்துகொண்டு அமர்ந்து இருப்பது வெறுப்பை ஏற்படுத்தி விடும்.

அந்த நேரங்களில் உங்களுக்கு உதவ இந்த எளிய மென்பொருள் Shutdown Scheduler போதும். நீங்கள் ஒரு வாரம் முழுவதும் கணினி shutdown ஆக வேண்டிய நேரத்தை குறிப்பிட வேண்டும். அல்லது குறிபிட்ட நாளில் shutdown ஆக வேண்டிய நேரத்தை குறிப்பிட வேண்டும். Shutdown Scheduler மீதி வேலையை பார்த்துக்கொள்ளும் .

இதை எந்தவகையில் உபயோகிக்கலாம் என்பதை நீங்களே கற்பனை பண்ணி பாருங்கள். உங்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும்.

குறிப்பு : இந்தShutdown Scheduler விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் vista                           வில் வேலை செய்யாது. இது உங்கள் கணினியில் வேலை செய்ய _______.Microsoft .NET Framework 2.0 வேண்டும்

இணையத்தில் இருந்து எடுக்க இங்கு கிளிக் செய்யவும்.

நன்றி: படங்கள் எடுக்கப்பட்ட தளங்களுக்கு நன்றி

___________________________________________________

திருக்குறள்:

அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று.

___________________________________________________

Posted in தொழில்நுட்பம் | Tagged , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

AVG நிறுவனத்தின் புதிய இலவச அண்டிவைரஸ் மென்பொருள் AVG Antivirus Free Edition 2011.

____________
AVG Antivirus Free Edition 2011 தற்போது உங்களுக்காக இலவசமாக இணையத்தில் கிடைக்கிறது.இது AVG Antivirus சின் சமீபத்திய வெளியீடு. AVG உங்கள் கணினியை வைரஸ்களிடம் இருந்து பாதுகாக்க அடிப்படை பாதுகாப்பு தரும்.

இந்த AVG Antivirus Free Edition 2011 னில் antivirus, anti spyware, Email Scanner, Resident Shield, LinkScanner, Anti RootKit மற்றும் PC Analyze.
ஆகிய வசதியும், பாதுகாப்பும் தர வல்லது. இந்த புதிய வெளியீடு AVG Antivirus Free Edition 2011 முந்தைய AVG Antivirus Free 2010 ,2009 ஆகியவற்றுடன் வேகமாக இயங்க கூடியது.இந்த இலவச AVG Antivirus Free Edition 2011 உள்ள முக்கிய அம்சம் வைரஸ் கண்டறியும் இன்ஜின் பணம் செலுத்தி வாங்கும் AVG Antivirus சில் உள்ள வைரஸ் கண்டறியும் இன்ஜின் ஒத்த வகையில் அமைக்க பட்டு உள்ளது. இன்னும் பலவித வசதிகளை இந்த புதிய வெளியீடு கொண்டுள்ளது.

இந்த AVG Antivirus Free Edition 2011 இணையத்தில் இருந்து எடுக்க இங்கு கிளிக் செய்யவும்.

நன்றி: free.avg.com மற்றும் படங்கள் எடுக்கப்பட்ட தளங்களுக்கு நன்றி

___________________________________________________

திருக்குறள்:

என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம்.

___________________________________________________

Posted in தொழில்நுட்பம் | Tagged , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

உங்கள் MP4 நிகழ்படங்களை இயக்க உதவும் இலவச mp4 Player

சமீபகாலமாக MP4 எனப்படும் இந்த வகை கோப்புகள் அதிகம் பிரபலமாகி வருகிறது. இதற்கு காரணம் MP4 நிகழ்படங்கள் அளவில் சிறியதாக இருக்கும் இருப்பினும் நல்ல தரத்துடன் இருக்கும். இதனால் இதன் பயன்பாடுகள்அதிகமாகி விட்டது.

உங்களிடம் உள்ள பல பிளேயர் இந்த MP4 போர்மட்
இயங்கவில்லையா ?
உங்களுக்கு உதவ இதோ mp4 Player 4.0.

MP4 பிளேயர் ஒரு இலவச மென்பொருள், இது நிகழ்படம் இயங்குவதற்கு தேவையான Codec உங்கள் கணினியில் இல்லை எனில், அது தானாகவே தேடி நிறுவி கொள்ளும். Mp4 கோப்பு இதில் எளிதாக இயங்கும். இயக்குவதுகும் இன்ஸ்டால் செய்வதற்கும் எளிதாக இருக்கும். இதை இணையத்தில் இருந்து இலவசமாக எடுக்கலாம்.

நன்றி: படங்கள் எடுக்கப்பட்ட தளங்களுக்கு நன்றி

___________________________________________________

திருக்குறள்:

அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை.

___________________________________________________

Posted in தொழில்நுட்பம் | Tagged , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்